Sunday, October 7, 2012

படித்ததில் பிடித்த தத்துவங்கள்


படித்ததில் பிடித்த தத்துவங்கள்



When I Asked God for Peace
He Showed Me How to Help Others
God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed.”
- Swami VIVEKANANDA
***
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- விவேகானந்தர்.
***
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
***
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
***
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
***
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
- பில் கேட்ஸ்
***
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
***
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
***
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
***
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
***
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
***
எல்லாம் சில காலமே
- ரமண மகரிஷி
***
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
***
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
***
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
***
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
***
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது.
- பாரதியார்
***
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
***
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
***
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.ஆனால்,
அவைதான்வாழ்வை இனிமையாக மாற்றும்.
***
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
***
ஓர் உண்மை:நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,நீ யாரை விரும்புகிறாயோஅவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!
***
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய










கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது. 

உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல்  இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம். 

 My Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு 
\Windows\System32\Drivers\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள். 
அந்த கோப்பின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 www.youtube.com எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 www.sitename.com (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும். 

   
கணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதும். இனி அந்த குறிப்பிட்ட தளங்கள் உங்கள் கணினியில் திறக்காது.




















Thursday, September 27, 2012

அவசியம் படிக்கவும்

னிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்புபோல் மாறிக் கொண்டிருக்கிறது, செல்போன்! இது எவ்வளவு முக்கியமானது என்றாலும், அதிக நேரம் பேசினால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு.
மும்பை கே.இ.எம். மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை மருத்துவ பேராசிரியர் நீலம் சாதியும், டாக்டர் தனஸ்ரீ சிப்லங்கரும் இணைந்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட 50 பேரின் காது கேட்கும் திறனை ஆய்வுசெய்தனர். ஆய்வுக்குட் பட்டவர்களில் 68 சதவீதம் பேர் 21 முதல் 25 வயது இளைஞர்கள். அவர்களில் 16 பேர் பெண்கள்.
ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 23 பேர், (அதாவது 46 சதவீதத்தினர்) செல்போனில் அள வுக்கு அதிகமாகப் பேசி, தங்கள் காது கேட்கும் திறனை ஓரளவு இழந்திருந்திருந்தது கண்டுபிடிக் கப்பட்டிருக்கிறது. செல்போனில் பேசுபவர்கள் மட்டு மன்றி, அதை பயன்படுத்தி காது கருவிகளை மாட்டிக்கொண்டு அதிக நேரம் பாட்டுகேட்பவர் களுக்கும் காதுகேட்கும் திறன் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
"இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வருடக்கணக்கில் செல்போனை பயன்படுத்தியவர்கள். வலது காதில் வைத்து பெரும்பாலும் பேசியதால், வலது காது வலியால் பாதிக்கப்பட்டிருக்கவும் செய்கிறார்கள்'' என்றும் டாக்டர் நீலம் சாதி தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கு உள்ளான 50 பேர்களில் 20 பேர் இடது காதில்வைத்து செல்போனை பயன்படுத்துகிறவர்கள். 19 பேர் வலதுகாதில்வைத்து பேசியவர்கள். மீதி 11 பேர் இரண்டு காதுகளிலும் மாறிமாறி வைத்து பேசியவர்கள்.
இவர்களில் 13 பேர் காது வலியாலும், 11 பேர் காது அடைப்பினாலும், 19 பேர் காது சரியாகக் கேட்காமலும், 7 பேர் காதில் வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்காத அளவிற்கு செல்போனில் பேசுவது எப்படி?
- தவிர்க்கமுடியாத நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் செல்போனில் பேசுங்கள்.
- தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் செல்போன்களை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட செல்போன்களை மட்டும் உபயோகியுங்கள்.
- நேரடியாக செல்போனில் பேசும் பழக்கத்தை தவிர்த்து ஸ்பீக்கர் மோட், ஹியரிங் போன் மற்றும் ஹெட்போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.
- குழந்தைகளும், கர்ப்பிணிகளும் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
- பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.
- செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகியுங்கள். ஈ- மெயில் தொடர்பும் சிறந்தது.
- செல்போன் மிகக்குறைந்த பேட்டரியில் வலுவிழந்து நிற்கும்போது பேச வேண்டாம். முழுமையாக `சார்ஜ்' செய்துவிட்டு பேசுங்கள்

Thursday, September 13, 2012

நட்பின் தேவை

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..

நட்பு

நட்பு

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.



மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.

பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது.



என் பாடசாலை நண்பர்கள் பலர் இன்றைக்கு புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் தொலைபேசி மூலமும், இணைய அரட்டைகள் மூலமும் எங்கள் நட்புத் தொடர்கின்றது. நாம் பெரும்பாலும் எங்கள் கல்லூரி வீதி இனிய வாழ்க்கையை மீட்டிப்பார்ப்போம்.

இன்னொரு நட்பு வட்டம் ஊரில் உள்ள நண்பர்கள் இவர்களின் நட்பிற்க்கு பெரும்பாலும் வயது எல்லை இல்லை. என்னுடய வயதுப் பொடியள், என்னைவிட சற்று வயது கூடியவர்கள், குறைந்தவர்கள் என இந்த வட்டம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுகள், திருவிழாக்கள், கிரிக்கெட், காற்பந்து என இந்த வட்டத்துடன் அடித்த லூட்டிகள் பசுமையானவை. ஊரை விட்டு வெளியேறிய பின்னர் இவர்களின் தொடர்புகள் பெரிதாக இல்லாவிட்டாலும் மீண்டும் ஊரிற்குச் செல்லும் காலங்களில் பழையபடி சில நாட்கள் கும்மாளம் தான்.



அண்மைக் காலமாக இணையத்தினூடான நட்புகள் அதிகரித்துவந்துள்ளன. இதில் சிலரின் நட்புகள் நேரடியாகவும் சிலரின் நட்புகள் முகமறியாமலும் இருந்தாலும் நட்பு பாராட்டுவதில் எந்தக் குறைகளும் இல்லை.

பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

வாழ்க்கையில் கஸ்டமான காலத்தில் கைகொடுப்பது பெரும்பாலும் நட்புத்தான். என்றைக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அதனைவிட பெரிய இன்பம் வேறில்லை.


Wednesday, September 12, 2012

(Startup Drive Checkup) ஸ்டார்ட் அப் டிரைவ் செக்கப் நிறுத்த வழி

சில நேரங்களில் கணினி இயக்கம் ஆரம்பிக்கும் போதே நீல நிற விண்டோவில் உங்கள் கணினியின் வன்தட்டுகளை சோதிக்கிறேன் ஏதாவது ஒரு விசையை அழுத்தசொல்லி வரும் நீங்கள் இதை தவிர்க்க நினைத்தாலும் விண்டோ மாறாமல் முழு வன்தட்டையும் சோதித்த பின் தான் விண்டோ திறக்கும் நாம் பார்க்க போவது இதை தவிர்ப்பதற்கான மாற்றுவழிகளைத்தான் இப்போது பார்க்கபோகிறோம்.



முதல் வழி

கணினியை இயக்கி F8 கீயை விட்டு விட்டு அழுத்துங்கள் உங்களுக்கு ஒரு கருப்பு விண்டோ திறக்கும் இனி அதில் Last Know Good Configuration என்பதை தெரிவு செய்து எண்டர் கொடுத்து போய் பாருங்கள் ஒரு வேளை பிரச்சினை சரியாகலாம்.

இரண்டாவது வழி

இல்லை இன்னும் சரியாகவில்லை என்றால் அடுத்ததாக மீண்டும் கணினியை இயக்கி Start ->Run->Programs->Accessories->
System Tools->Restore என்பதை செலக்ட் செய்து புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Restore My Computer to an Earlier Time என்பதை தேர்வு செய்து ஓக்கே கொடுங்கள் இனி அடுத்த பக்கத்தில் புதிய விண்டோவில் ஒரு பக்கம் தேதியும் மறுபக்கம் நீங்கள் கணினியில் ஏற்படுத்திய மாற்றங்களும் காணப்படும் இனி நீங்கள் உங்கள் கணினியில் எந்த நாளில் உங்கள் கணினி நல்ல நிலையில் இயங்கியது என்பதை ஒவ்வொரு தேதியாக கிளிக்கும் போதும் வலது பக்கம் தெரியும் உங்களுக்கு சரியானதாக தெரியும் ஒரு தேதியை தெரிவு செய்து ஓக்கே கொடுக்கவும் இனி உங்கள் கணினி ரீஸ்டோர் செய்ய தொடங்கிவும் சிறிது நேரத்திற்க்கு பிறகு உங்கள் கணினி அனைந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகி ஒரு பாப் அப் விண்டோ போல திறக்கும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் கணினி நல்ல நிலைக்கு வந்துவிட்டாதாவென ஒரு வேளை சரியாக பட்சத்தில் மீண்டும் வேறு ஒரு தேதியை முயற்சி செய்து பார்க்கலாம் பொருமை இல்லாதவர்கள் அடுத்த முயற்சிக்கு செல்லலாம்.



மூன்றாவது வழி

Start ->Run & Type msconfig என டைப் செய்து ஓக்கே கொடுக்கவும் இப்போது ஒரு சிறிய விண்டோ திறக்கும் அதில் Startup என்கிற டேப்பில் CHKDISK என்பது மாதிரியான பெயரில் ஏதாவது டிக் மார்க் செய்யப்பட்டுள்ளதா என பார்க்கவும் இருந்தால் மட்டும் அந்த டிக் மார்க் எடுத்துவிடுவதன் மூலம் அதை டிசாபிள் செய்யலாம் இனி கணினி ரீஸ்டோர் கேட்கும் ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி பிரச்சினை சரியாகும். ஒரு வேளை அப்படி இல்லையென்றால் ஒன்றும் பிரச்சினையில்லை அப்படியே மூடிவிடவும்.



நான்காவது வழி

விண்டோஸ் இயக்கம் தொடங்கும் முன் எந்த டிரைவில் பிரச்சினை இருப்பதாக சொல்லி டிரைவ் செக்கிங் செய்கிறதோ அந்த டிரைவின் பிராப்பர்ட்டிஸ் திறங்கள் உதாரணமாக D டிரைவில் பிரச்சினை என்றால் D டிரைவின் வலது பக்கம் கிளிக்கி Properties என்பதை தெரிவு செய்து திறக்கும் சிறிய விண்டோவில் Tool டேப்பை கிளிக்குங்கள் அதில் Check Now என்பதை கிளிக்கி அதில் டிக் மார்க் இருந்தால் எடுத்துவிட்டு ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி உங்கள் கணினியில் இந்த பிரச்சினை இருக்காது சரி இப்பவும் சரியாகவில்லை நண்பா நான் என்ன பண்றது அப்படினு கேக்கிற நண்பர்களுக்காக அடுத்த வழிமுறையும் பார்த்துவிடலாம்.



ஐந்தாவது வழி

இந்த முறையில் நிச்சியம் சரியாகிவிடும் நம்பிக்கையோடு செயல்படுங்கள் இனி நீங்கள் செய்ய வேண்டியது Start –> Run & Type cmd இப்போது உங்களுக்கு கமாண்ட் பிராம்ட் வந்திருக்கும் அதில் உங்களுக்கு D டிரைவ் பிரச்சினைக்குரியதாக இருக்கிறதோ அதற்கு தீர்வாக chkntfs /X D: என கமாண்ட் கொடுஙகள் இனி சரியாகிவிடும் ஒரு வேளை உங்களுடைய கணினியில் நான்கு டிரைவ்கள் அதாவது C, D, E, F என்பதாக இருக்கிறது இந்த நான்கு டிரைவிலும் பிரச்சினை இருக்கிறது அதற்கு Chkntfs /X C: D: E: F: என கொடுத்து பாருங்கள் இபோது உங்கள் கணினி இயங்கும் போது டிரைவ் செக்கிங் இருக்காது இனி இந்த கமாண்ட் கொடுப்பதிலும் பிரச்சினை இருக்கிறது ஒன்றும் கவலைப்படவேண்டாம் அடுத்து ரிஜிஸ்டரியில் மாற்றம் ஏற்படுத்தி முயற்சி செய்துபார்ப்போம்.

ஆறாவது வழி

உங்கள் கணினியில் Start –> Run & Type regedit என டைப் செய்து ஓக்கே கொடுங்கள் உங்களுக்கு கணினியின் இதயபகுதியான ரிஜிஸ்டரி பகுதி திறக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது முதலில் ரிஜிஸ்டரி பேக்கப் எடுத்துவைத்துக் கொள்வதுதான் அடுத்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CURRENTCONTROLSET\CONTROL\Session Manager இதில் இந்த Session Manager கண்டுபிடித்ததும் அதை இருமுறை கிளிக்கி வலது பான் பக்கம் பார்க்கவும் அங்கு BootExecute என்கிற பெயரில் ஒரு ரெஜ் இருக்கும் இனி அதை டபுள் கிளிக் அல்லது Modify என்பதை தெரிவு செய்யுங்கள் ஏற்கனவே அங்கு autocheck autochk * என்பதாக இருக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது D டிரைவில் பிரச்சினை என்றால் autocheck autochk /k:D * இப்படி மாற்றிவிடவும் இல்லை முறையாக மூன்று டிரைவ்களிலும் பிரச்சினை என்றால் autocheck autochk /k:C /k:D /k:E * என மாற்றிவிடுங்கள் இனி ஓக்கே கொடுத்து வெளியேறி விடுங்கள் ஒரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்துவிடுங்கள் இப்போது எல்லாம் சரியாகி இருக்கும் இனியும் பிரச்சினை இருந்தால் மூன்றாம் நபர் மென்பொருள் உபயோகித்து பார்க்கலாம் இல்லையென்றால் உங்கள் விண்டோஸ் குறுந்தகடு இருந்தால் அதன் மூலமாக ரிப்பேர் செய்யலாம்.



என்ன நண்பர்களே உங்களுக்கு இது உபயோகமில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள் ஏதாவது ஒரு நேரத்தில் பயன்படும்.